மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெஞ்களூர் மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியனான நிலையில் ஆர்சிபி அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இதில், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்று விளையாடின. கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
எலிமினேட்டர் போட்டியில் கடைசி ஓவரில் 5 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் தோற்கவே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு ஆர்சிபி அணிக்கு கிடைத்தது. இதையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 114 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆர்சிபி அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் இருவரும் களமிறங்கி விளையாடி ரன்கள் குவித்தனர். ஷோஃபி டிவைன் 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மிருதி மந்தனா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்லீஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் பொறுமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியாக ஆர்சிபி மகளிர் அணியானது 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இந்த சீசனில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வென்றவர்களின் பட்டியல் பற்றி பார்க்கலாம். மேலும், பரிசுத் தொகை எவ்வளவு என்றும் பார்க்கலாம்.
Winner, Runner, Orange, Purple Cap, Sixes, Emerging Players Awards:
சாம்பியன் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் – ரூ.6 கோடி
ரன்னர் – டெல்லி கேபிடல்ஸ் மகளிர் – ரூ.3 கோடி
ஆரஞ்சு கேப் – எல்லிஸ் பெர்ரி (ஆர்சிபி) – 9 போட்டியில் 347 ரன்கள் – ரூ.5 லட்சம்
பர்பிள் கேப் – ஷ்ரேயங்கா பாட்டீல் (ஆர்சிபி) – 8 போட்டியில் 13 விக்கெட்டுகள் – ரூ.5 லட்சம்
மிகவும் மதிப்பு மிக்க வீராங்கனை – தீப்தி சர்மா (யுபி வாரியர்ஸ்) – ரூ.5 லட்சம்
வளர்ந்து வரும் வீராங்கனை – ஷ்ரேயங்கா பாட்டீல் – ஆர்சிபி – ரூ.5 லட்சம்
பவர்புல் ஸ்டிரைக்கர் – ஜார்ஜியா வார்ஹாம் – ஆர்சிபி – ரூ.5 லட்சம்
அதிக சிக்சர்கள் (20 சிக்ஸ்) – ஷஃபாலி வர்மா (டெல்லி கேபிடல்ஸ்) – ரூ.5 லட்சம்
பைனலில் ஆட்டநாயகி விருது – ஷோஃபி மோலினெக்ஸ் – ஆர்சிபி -ரூ.2.5 லட்சம்
பவர்புல் ஸ்டிரைக்கர் ஃபைனல் – ஷஃபாலி வர்மா – ரூ.1 லட்சம்
ஃபேர் பிளே விருது – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஆர்சிபி