நான் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறவில்லை! 1xBet நிறுவனத்துக்கு கிளாசன் சிறப்பு பேட்டி!

Published : Jul 10, 2025, 08:17 PM ISTUpdated : Jul 10, 2025, 08:20 PM IST
Heinrich Klaasen, an ambassador for the betting company 1xBet, shared a message with his fans regarding the decision.

சுருக்கம்

நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று 1xBet நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹென்ரிச் கிளாசன் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஹென்ரிச் கிளாசன், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது நவீன கால கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் துடிப்பான மட்டை பந்தாட்ட வீரர் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பாகத்தின் முடிவைக் குறிக்கிறது. தனது 33வது வயதில், அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து விலகுகிறார். இருப்பினும்,இந்தியன் பிரீமியர் லீக் ((IPL) SA20 மற்றும் இங்கிலாந்தின் 'தி ஹண்ட்ரட்' உட்பட உலகெங்கிலும் நடைபெறும் தேசிய அளவிலான லீக் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார்.

ஹென்ரிச் கிளாசன் ஓய்வு

மார்ச் மாதம், தென்னாப்பிரிக்காவுக்காக தனது கடைசிப் போட்டியில் கிளாசென் விளையாடினார். சாம்பியன்ஸ் டிராஃபியின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டார். இது அவரது பிரகாசமான சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்ற முடிவாக இருந்தது. கிளப் போட்டிகளில் விளையாடுவது தொடரும், இந்த நட்சத்திர வீரர் குறைந்தது 3 வருடங்களுக்காவது தொடர்ந்து விளையாடத் திட்டமிட்டுள்ளார்.

1xBet நிறுவனத்தின் விளம்பர தூதர் கிளாசன்

1xBet பந்தய நிறுவனத்தின் விளம்பரத் தூதரான ஹென்ரிச் கிளாசன், தனது இந்த முடிவு குறித்து தனது ரசிகர்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். “எனக்கு இது ஒரு சோகமான நாள். எனது மற்றும் எனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க எனக்கு நீண்ட காலம் ஆனது” என்று அவர் தனது பிரியாவிடை அறிக்கையில் எழுதினார். புகழைப் பெறுதல் உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் ஆக்ரோஷமான மட்டைப் பந்தாட்ட வீர்களுள் ஒருவராக கிளாசென் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டியை மறக்க முடியுமா?

அவரது சக்திவாய்ந்த ஷாட்களும், ஆட்டத்தின் வேகத்தை மாற்றும் திறமையும், சமீபத்திய ஆண்டுகளில், அவரை தென்னாப்பிரிக்க தேசிய அணியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வீரராக மாற்றியுள்ளது. செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 83 பந்துகளில் 174 ரன்கள் எடுத்தது கிளாசனின் வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அந்த இன்னிங்ஸ் மிகச்சிறந்த ஒன்றாக மாறியது மற்றும் கிளாசனின் வீரியமான, தன்னம்பிக்கை மிக்க மற்றும் பார்க்க சிலிர்ப்பூட்டும் வகையிலான விளையாட்டுப் பாணியை சரியாக எடுத்துக்காட்டியது.

கிளாசன் ஓய்வு முடிவு எடுத்தது ஏன்?

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி வரையிலும் மற்றும் 2024 க்கான T20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரையிலும் தென்னாப்பிரிக்கா முன்னேறியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அணிக்கு ஏற்படும் தடைகளைத் தகர்த்து வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழ்நிலையில், ஹென்ரிச்சின் திறமை மிகப் பிரகாசித்தது. வெற்றி அல்லது தோல்வி, ஒரே பந்து, ஒரே வாய்ப்பு, ஒரே ஷாட் என்ற அனைத்து சூழ்நிலையிலும் அவர் அணிக்காக விளையாடினார். கிளாசனுக்கு இந்த முடிவு எடுப்பது கடினமாக இருந்தது, ஆனால் தெளிவானதாக இருந்தது. அவர் கூறுவது போல், தனிப்பட்ட சூழ்நிலைகள் மிகப் பெறும் பங்கு வகித்தது. குடும்பம் மட்டுமே பிரதான காரணம். தற்போது பயணம் அதிகம் செய்ய வேண்டி வருகிறது.

குடும்பத்திற்கு முதல் முக்கியத்துவம்

ஆனால், நான் எனது குடும்பத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்களுக்கு வயதாகும்போது, உங்களைப் பற்றியும், உங்கள் பலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் நீங்களே நன்கு அறிந்து கொள்வீர்கள். நான் நன்றாக மனப் பக்குவமடைந்துவிட்டேன். எனவே, எனக்கு எனது விளையாட்டு அதிகம் தேவையில்லை. என்னுடைய குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே, எனக்கான உந்து சக்தி எளிதானது, ”என்று அவர் 1xBet க்கான வர்ணனையில் கூறினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிக்கு முக்கிய பங்கு

இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலமானது, வெற்றி பெற்ற போதிலும், விளையாட்டிற்கு அடிமையாகாத ஒரு வீரரின் முதிர்ச்சியையும், அவரின் முன்னுரிமையையும் காட்டுகிறது. அதற்குப் பதிலாக, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டையும் சமநிலை செய்கிறார். அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு காலம் செல்லச் செல்ல, IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அணியின் மிக முக்கியமான அங்கமாக கிளாசன் மாறிவிட்டார். 2024 ஆம் ஆண்டில் SRH பிளேஆஃப் இறுதிப் போட்டி வரை சென்று வெற்றிக் கோப்பையை நூலிலையில் தவற விட்டது. மேலும், ஹென்ரிச் அந்த வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்.

ஐபிஎல் குறித்து கிளாசன் கூறுவது என்ன?

“நான் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். எனவே வரும் காலத்தில் இன்னும் இரண்டு IPL போட்டிகள் மட்டுமே நான் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். IPL ஒரு சிறந்த போட்டி மற்றும் அது மிகவும் கடினமான ஒன்று. அதனால் இந்தத் தருணத்தில் அதை நான் மகிழ்வோடு அனுபவித்து வருகிறேன்” என்று கிளாசென் கூறுகிறார்.

2 வீரர்களுக்கு புகழாரம்

மேலும், அவர் அணியின் திறமைமிக்க இளம் வீரர்களான அபிஷேக் மற்றும் நிதிஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டதாகவும், அவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஹென்ரிச் கிளாசென், தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முக்கியத் தருணம் இரண்டு சீசன்களுக்கு முன்பு நடந்தது என்று நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில், அவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மீண்டும் விளையாடத் துவங்கினார். சிறந்த போட்டிகளில் விளையாடி, பேட்டிங்கில் சிறந்த திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

களத்தில் நல்ல மனிதர்

அவரைப் பொறுத்தவரை, அந்தக் காலம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமின்றி, கிரிக்கெட் விளையாட்டிலும் தனது பங்கு என்ன என்பதை அவர் எவ்வாறு புரிந்துகொண்டார் என்பதிலும் அவரை நிறைய மாற்றியது. IPL தன்னை ஒரு வீரராகவும் ஒரு சிறந்த மனிதராகவும் மாற்றியமைத்ததாக கிளாசன் ஒப்புக்கொள்கிறார். “பந்து வீச்சாளர்கள் பந்து வீச விரும்பாத ஒரு பேட்ஸ்மேனாகவும், விளையாட்டை கடினமாக விளையாடிய ஒரு நபராகவும், அதே சமயம் களத்தில் ஒரு நல்ல மனிதராகவும் இருந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

பயிற்சியாளராக விருப்பமா?

“என்னைப் போன்ற ஒரு அடையாளமிக்க கிரிக்கெட்டை விளையாட இளம் குழந்தைகளை நான் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.” எதிர்காலத்தில், தனது கிரிக்கெட் விளையாடும் காலம் முடியும் நேரம் வரும்போது, புதிய தலைமுறையினருக்கு தனது அனுபவத்தை வழங்குவதற்காக, ஒரு பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ இருப்பதற்கான வாய்ப்புகளை ஹென்ரிச் நிராகரிக்கவில்லை.

டேவிட் மில்லர் குறித்து பேச்சு

உலகம் முழுவதிலும் உள்ள இளம் வீரர்களுக்கு இந்த வீரர் ஒரு முன்னுதாரணம். ஆனால், இப்போதும் கூட, அவர் அவருக்கு கற்றுக் கொடுத்தவர்களை நினைவில் வைத்திருக்கிறார். குறிப்பாக, டேவிட் மில்லரைப் பற்றி கிளாசன் ஆர்வத்துடன் பேசுகிறார். ஹென்ரிச்சின் விளையாட்டுத் தொடர்பான அணுகுமுறையில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். கிரிக்கெட்டில் புதிதாக விளையாடத் தொடங்கும் இளம் வீரர்கள் அவசரப்படவோ அல்லது உடனடியாக பெயர் பெறவோ முயற்சிக்க வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால்???

உங்களைப் பற்றி புரிந்துகொண்டு உங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பது முக்கியம். அதிகப் பிரயத்தனம் செய்யாதீர்கள், உங்களை நீங்களே அறிந்துகொண்டு, உங்களுக்கு ஏற்றதைச் செய்யுங்கள், அப்போது நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள் என்பது ஹென்ரிச்சின் அணுகுமுறை. தனது வாழ்வில் மீண்டும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், கிளாசன் நிச்சயமாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதைத்தான் தேர்ந்தெடுப்பார். அவர் நினைவு கூர்கிறார்:

அடுத்தது என்ன?

நான் மீண்டும் டெஸ்ட் போட்டியில் இறங்கி எனது முதல் ஷாட்டை விட சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன், ஆனால் அது வாழ்க்கையின் ஒரு பகுதி.” அடுத்தது என்ன? மீண்டும் ஒருமுறை, இதை வலியுறுத்தி சொல்வது பொருத்தமானது: கிளாசென் தேசிய அணியுடனான தனது உறவை மட்டுமே முடிக்கிறார். கிளப் அளவில், அவருக்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன. அவர் விரைவில், IPL, MLC, தி ஹண்ட்ரட் மற்றும் SA20 போன்ற போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகுவது, ஹென்ரிச் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட உதவும். இது அவரை ஒரு சிறந்த வீரராக மாற்ற உதவிய குடும்பத்தினருக்கும் புத்துணர்வு பெற உதவியாக இருக்கும்.

கிளாசனுக்கு ரசிகர்கள் பாராட்டு

1xBet சமீபத்தில் நடத்திய ரசிகர்களுக்கான கருத்துக் கணிப்பில், இந்த தென்னாப்பிரிக்க வீரர் IPLவிளையாட்டில் மிகவும் பிரபலமான முதல் 5 விளையாட்டு வீரர்களுக்குள் இடம்பிடித்தார். கிளாசன் தனது துடிப்புமிக்க மற்றும் அற்புதமான விளையாட்டு பாணியால் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார். “அவர் எனக்கு ஒரு முன்னுதாரணம், அவரது ஷாட்கள் அனைத்தும் ஆச்சரியமானவை! மிகச் சரியாக தாக்கும் சக்தி,” என்று ஒரு ஆர்வலர் எழுதினார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்

மைதானத்தில், ஹென்ரிச் இறங்கும் ஒவ்வொரு முறையும், அவர் அதிகத் திறமைகளையும் உண்மையான வெற்றியாளருக்கான மனநிலையையும் வெளிப்படுத்துகிறார். தான் விரும்பும் அணி என்பதையும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட் பிரியர்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார்கள். “கிளாசன் ஒரு உண்மையான சாம்பியன்.” அவரது சிறந்த உடல்வாகு, அவரது இயல்பான திறமைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறது. அதனால்தான், தொடர்ந்து அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்: இப்போதும் அவர்தான் சிறந்த வீரர்” என்று நம்புவதால்தான், நான் அவர் மீது பந்தயம் கட்டுகிறேன் என்று ஒரு ஆதரவாளர் சுருக்கமாகக் கூறினார்.

தேசிய அணி ரசிகர்களுக்கு வாய்ப்பு இல்லை

தேசிய அணி அளவில் இனி அவர் விளையாடப் போவதில்லை என்றாலும், வெறும் புள்ளிவிவரங்கள் என்பதையும் தாண்டி, அவரது ஸ்டைல், மன உறுதி மற்றும் இனி வரும் காலங்களில் அரங்கங்கள், லாக்கர் அறைகள் மற்றும் ரசிகர்களின் இதயங்களில் எதிரொலிக்கும் குரல் ஆகியவற்றையும் கிளாசன் விட்டுச் செல்கிறார். அவர் எப்படி நினைவுகூரப்பட விரும்புகிறார் என்று கேட்டால், கிளாசென் மிக எளிமையாக இவ்வாறு பதிலளிக்கிறார். ஒரு சிறந்த அணி வீரராகவும் மிகத்திறமையான கிரிக்கெட் வீரராகவும்.” அதிர்ஷ்டவசமாக, ரசிகர்கள் அவரது ஆட்டத்தை ரசிக்க இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தேசிய அணி ரசிகர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு இல்லை.

1xBet பந்தய நிறுவனம்

1xBet நிறுவனம், பந்தயத் துறையில் 18 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பந்தய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளின் மீது பந்தயம் கட்டலாம். இந்த நிறுவனத்திற்கான வலைத்தளம் மற்றும் செயலி 70 மொழிகளில் வழங்கப்படுகிறது. 1xBet நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூட்டாளர் பட்டியலில் FC Barcelona, LOSC Lille, La Liga, Serie A, European Cricket Network, Durban, Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளும் நிறுவனங்களும் உள்ளது.

1xBet விளம்பர தூதர்கள் யார்?

இந்தியாவில், பிரபல கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இந்த நிறுவனத்தின் தூதர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் IGA, SBC, G2E ஆசியா மற்றும் EGR நோர்டிக்ஸ் விருதுகள் போன்ற மதிப்புமிக்க தொழில்முறைசார்ந்த விருதுகளுக்கு மீண்டும் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டு அவற்றைத் தொடர்ந்து பெறும் நிறுவனமாக இருந்து வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?