ஜாகீர் கானின் ஒரு சிறிய அறிவுரை தான் என்னை சிறந்த பவுலராக்கியது - ஹர்ஷல் படேல்

By karthikeyan VFirst Published Dec 4, 2021, 7:17 PM IST
Highlights

ஜாகீர் கானின் ஒரு சிறிய அறிவுரை தான், தன்னை சிறந்த பவுலராக உருவாக்கியது என்று ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.
 

இந்திய டி20 அணியின் முக்கியமான பவுலராக உருவெடுத்துள்ளார் ஹர்ஷல் படேல். 2012 ஐபிஎல்லில் இருந்து 2017 வரை ஆர்சிபி அணியில் ஆடிய ஹர்ஷல் படேல், 2018 - 2020 ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடிய ஹர்ஷல் படேலை மீண்டும் 2021 ஐபிஎல்லில் ஆர்சிபி அணி எடுத்தது. உள்நாட்டு போட்டிகளில் 2011ம் ஆண்டிலிருந்து ஹரியானா

ஐபிஎல் 14வது சீசனுக்கு (2021 ஐபிஎல்) முன்புவரை பெரிதாக வெளியே தெரியாத ஹர்ஷல் படேலுக்கு, 14வது ஐபிஎல் சீசன் தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றிய சீசனாக அமைந்தது.  14வது சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, நீலநிற தொப்பியை வென்றதுடன், ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வென்ற பவுலர் என்ற சாதனையை ட்வைன் பிராவோவுடன் பகிர்ந்துகொண்டார் ஹர்ஷல் படேல்.

ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹர்ஷல் படேல், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததுடன், ஆடும் வாய்ப்பையும் பெற்றார். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் படேல், இந்திய டி20 அணியின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்துவிட்டார்.

இந்நிலையில், ஜாகீர் கானின் அறிவுரை எப்படி தன்னை சிறந்த பவுலராக உருவாக்கியது என்பது குறித்து பேசியுள்ளார் ஹர்ஷல் படேல்.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்ஷல் படேல், நான் டெல்லி கேபிடள்ஸ்  அணிக்காக ஆடியபோது ஜாகீர் கானுடன் பேசும் வாய்ப்பை பெற்றேன். அப்போது, நான் வீசும் பந்துகள் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்றது எனது பெரும் பிரச்னையாக இருந்தது. அதனால் இதுகுறித்து ஜாகீர் கானிடம் கேட்டேன். அவர் என்னுடைய ரிலீஸ் ஆங்கிள் தான் பிரச்னை என்பதை கண்டறிந்து சொன்னார். நான் ஆஃப் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்தால், எனது ஆங்கிளுக்கு பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்கிறது. எனவே 6 அல்லது 7வது ஸ்டம்ப்பில் பிட்ச் செய்தால் பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு வரும் என்று அறிவுறுத்தினார். ஜாகீர் கான் கூறிய அந்த சிறிய அறிவுரை, என்னை சிறந்த பவுலராக உருவாக்கியது. அந்த அறிவுரை தான் எனது பவுலிங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார் ஹர்ஷல் படேல்.
 

click me!