151 கிமீ வேகத்தில் அனல்பறக்க பாகிஸ்தான் பவுலர் வீசிய பந்து.. அல்லு தெறித்த பேட்ஸ்மேன்.. வீடியோ

By karthikeyan VFirst Published Jan 9, 2020, 11:32 AM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடிவரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹாரிஸ் ராஃப், 151.3 கிமீ வேகத்தில் வீசி பேட்ஸ்மேனையும் தெறிக்கவிட்டதுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

பாகிஸ்தான் அணியில் எல்லா காலக்கட்டத்திலுமே தரமான மற்றும் அதிவேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்திருக்கிறார்கள்.

வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், ஜுனைத் கான், முகமது ஆமீர் ஆகியோர் வரிசையில், பாகிஸ்தானை சேர்ந்த ஹாரிஸ் ராஃபும் எதிர்காலத்தில் இணைந்துவிடுவார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடிராத அவர், பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடிவரும் ஹாரிஸ் ராஃப், சிட்னி தண்டர் அணிக்கு எதிராக அபாரமாக வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 

சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் கில்க்ஸ், காலம் ஃபெர்குசன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி அசத்தினார். 

An iconic BBL moment.

Enjoy Haris Rauf's hat-trick! pic.twitter.com/Qm8iYrIRfA

— KFC Big Bash League (@BBL)

இந்த போட்டியில் 15வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை 151.3 கிமீ வேகத்தில் வீசி மிரட்டினார். இப்போதைய பவுலர்கள் எல்லாம் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசுவதற்கே திணறுகின்றனர். பும்ரா, சைனி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், ஃபெர்குசன் ஆகியோரே நல்ல வேகத்துடன் வீசுகின்றனர். 

இந்நிலையில், இதுவரை சர்வதேச போட்டியிலேயே ஆடாத ஹாரிஸ் ராஃப், பிக்பேஷ் லீக்கில் 151.3 கிமீ வேகத்தில் வீசி மிரட்டினார். பேட்ஸ்மேனுக்கு அந்த பந்தை எதிர்கொள்ள டைமிங்கே கிடைக்கவில்லை. டுவிட்டரில் வைரலாக பரவும் அந்த வீடியோ இதோ.. 

Haris Rauf sending one down at 151.3km/h 😱 pic.twitter.com/TadptgVga2

— cricket.com.au (@cricketcomau)
click me!