IPL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போது யார்..? முதல் தகுதிப்போட்டியில் CSK vs GT பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : May 23, 2023, 07:32 PM IST
IPL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போது யார்..? முதல் தகுதிப்போட்டியில் CSK vs GT பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனின் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் உள்ள லக்னோ மற்றும் மும்பை அணிகள் நாளை நடக்கும் எலிமினேட்டரில் மோதுகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

IPL 2023: ரிக்கி பாண்டிங்கின் அடத்தால் அழிந்த டெல்லி கேபிடள்ஸ்..! செம காட்டு காட்டிய கவாஸ்கர்

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கீயுள்ளன. இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் 2வது தகுதிப்போட்டியில் மோதும். 

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனாகா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், தர்ஷன் நால்கண்டே, மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.

WTC 2021-23: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பெஸ்ட் லெவன்..! ரவி சாஸ்திரியின் அதிரடி தேர்வு

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Test Cricket : ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த டாப் 5 பவுலர்கள்!
WTC Points Table: ஆஸ்திரேலியா படுதோல்வியால் இந்தியாவுக்கு சாதகமா? டேட்டா என்ன சொல்கிறது?