LSG vs GT: லக்னோ அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்

Published : May 11, 2022, 06:43 AM IST
LSG vs GT: லக்னோ அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்

சுருக்கம்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஐபிஎல் 15வது சீசனில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதிய போட்டி புனேவில் நடந்தது.  
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணி 3 மாற்றங்களுடனும், லக்னோ அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, கரன் ஷர்மா, ஆவேஷ் கான், மோசின் கான்.


முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 5 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய மேத்யூ வேட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, 9.1 ஓவரில் 53 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் 63 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். டேவிட் மில்லர் அவரது பங்கிற்கு 26 ரன்கள் அடித்தார். ராகுல் டெவாட்டியா 16 பந்தில் 22 ரன்கள் அடித்தார். இன்னிங்ஸின் எந்த சூழலிலும் குஜராத் அணி அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்காமல் லக்னோ அணி பவுலர்கள் கட்டுக்கோப்புடன் சிறப்பாக பந்துவீசினர்.

20 ஓவரில் 144 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. 145 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் படுமட்டமாக பேட்டிங் ஆடி வெறும் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?