2019 உலக கோப்பையின் சிறந்த 11 வீரர்கள் இவர்கள் தான்.. கவாஸ்கர் அதிரடி

Published : Jul 15, 2019, 05:17 PM IST
2019 உலக கோப்பையின் சிறந்த 11 வீரர்கள் இவர்கள் தான்.. கவாஸ்கர் அதிரடி

சுருக்கம்

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து உலக கோப்பையின் சிறந்த அணியை பல ஜாம்பவான்கள் தேர்வு செய்துவருகின்றனர். 

உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது. 

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து உலக கோப்பையின் சிறந்த அணியை பல ஜாம்பவான்கள் தேர்வு செய்துவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த அணியை பார்த்தோம். ஐசிசியும் சிறந்த அணியை தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது கவாஸ்கர் தேர்வு செய்த அணியை பார்ப்போம். ரோஹித் சர்மா மற்றும் வார்னர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா 648 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் 647 ரன்களுடன் வார்னர் இரண்டாவது அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்கிறார்கள். 

மூன்றாம் வரிசையில் ஜோ ரூட்டையும் நான்காம் வரிசையில் வில்லியம்சனையும் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அலெக்ஸ் கேரியையும் ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், ஆர்ச்சர் மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். 

கவாஸ்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பை தொடரின் சிறந்த அணி:

ரோஹித், வார்னர், ரூட், வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஸ்டார்க், ஆர்ச்சர், பும்ரா. 
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!