தோனியை மறுபடியும் டீம்ல எடுக்குறதுக்கு காரணமும் இல்ல: அவசியமும் இல்ல.. முன்னாள் வீரர் விளாசல்

By karthikeyan VFirst Published Apr 13, 2020, 10:32 PM IST
Highlights

கடந்த ஓராண்டாக எந்தவிதமான போட்டியிலும் ஆடாத தோனியை, எதனடிப்படையில் மீண்டும் இந்திய அணியில் எடுக்க முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார்.

தோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வு பற்றி வாய் திறக்காத தோனி, அதன்பின்னர் இந்திய அணியிலோ அல்லது எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

எனவே தோனியின் கெரியர் முடிந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த விக்கெட் கீப்பர் உருவாக்கப்பட்டுவருகிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் இருந்தார் தோனி. ஆனால் ஐபிஎல் நடப்பதே சந்தேகமாகியுள்ளது. இனிமேல் தோனிக்கு இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்பே இல்லை. அது தெரிந்தும் அவர் இன்னும் ஓய்வு அறிவிக்கவில்லை. 

தோனியின் ஓய்வு குறித்து கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், ஏற்கனவே இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், இந்த முறை ஐபிஎல் நடக்கவில்லையென்றால் தோனி மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பது மிகவும் கஷ்டம். ஓராண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாத தோனியை எதனடிப்படையில் மீண்டும் இந்திய அணியில் எடுக்க முடியும் என்று கம்பீர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தோனியின் விக்கெட் கீப்பிங்குடன் ராகுலின் விக்கெட் கீப்பிங்கை ஒப்பிட முடியாது. தோனி சிறந்த விக்கெட் கீப்பர். ஆனாலும் தோனி இனிமேல் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

click me!