அந்த ஜோடியை பிரிக்க தேவையில்ல.. அந்த பையன தூக்கிப்போட்டு சீனியர் வீரரை எடுங்க!! கங்குலி தேர்வு செய்த உலக கோப்பை அணி

By karthikeyan VFirst Published Mar 10, 2019, 10:04 AM IST
Highlights

ஒருசில இடங்களுக்கான தேவைதான் இருக்கிறது என்று பார்த்தால், இதற்கிடையே தவானை பென்ச்சில் உட்காரவைத்து விட்டு ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும், தேவைப்பட்டால் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்ற கருத்துகள் எல்லாம் பரவிவருகின்றன. 
 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஒருசில இடங்களுக்கு பரிசீலனையில் இருக்கும் வீரர்கள், ஆஸ்திரேலிய தொடரில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

ரிசர்வ் விக்கெட் கீப்பர், ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் ஆகிய இடங்களுக்கான தேவை அணியில் உள்ளது. ரோஹித் - தவான் நிரந்தர தொடக்க ஜோடியாக உள்ளனர். ராகுல் மாற்று தொடக்க வீரராக இருப்பார். ரிசர்வ் விக்கெட் கீப்பர் என்ற இடத்தை தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் பிடிக்கப்போகிறார் என்பது இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. 

அதேபோல் ஹர்திக் பாண்டியா மட்டுமே அணியில் ஆல்ரவுண்டர். எனவே விஜய் சங்கர் - ஜடேஜா ஆகிய இருவரில் யார் உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் விஜய் சங்கர், கடைசி ஓவரை அருமையாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். இதையடுத்து விஜய் சங்கருக்கான வாய்ப்பு வலுவாகியுள்ளது.

ஒருசில இடங்களுக்கான தேவைதான் இருக்கிறது என்று பார்த்தால், இதற்கிடையே தவானை பென்ச்சில் உட்காரவைத்து விட்டு ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும், தேவைப்பட்டால் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்ற கருத்துகள் எல்லாம் பரவிவருகின்றன. 

இந்நிலையில், உலக கோப்பை அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, ரோஹித் - தவான் அருமையான தொடக்க ஜோடி. அவர்களால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுக்க முடியும். அதனால் தொடக்க ஜோடியில் மாற்றம் செய்ய தேவையில்லை. ராகுல் மாற்று தொடக்க வீரராக இருக்கலாம். கோலியின் பேட்டிங் ஆர்டரை மாற்றவே கூடாது. கோலி, கோலி தான். அவர் அவரது மூன்றாம் வரிசையிலேயே இறங்க வேண்டும். கோலிக்கு அடுத்து ராயுடு, தோனி, கேதர் என்ற வரிசையில் இறங்கலாம்.

ஆல்ரவுண்டரை பொறுத்தமட்டில் விஜய் சங்கரை உலக கோப்பைக்கு அழைத்து செல்லலாம். ஜடேஜா தேவையில்லை. விஜய் சங்கர் நாக்பூரில் நன்றாக பந்துவீசினார். பேட்டிங்கும் நன்றாக ஆடுகிறார். அதனால் விஜய் சங்கரை உலக கோப்பைக்கு அழைத்து செல்லலாம் என கங்குலி தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்ட் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கலாம். உலக கோப்பைக்கு ரிசர்வ் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தான் கங்குலியின் தேர்வு.

கங்குலி தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ராகுல்.
 

click me!