கடைசி 2 போட்டியில் அவர தூக்குனது பெரிய தவறு.. பாரபட்சம் பார்க்கிறார் கேப்டன் கோலி!! காம்பீர் பகிரங்க குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published Mar 14, 2019, 10:37 AM IST
Highlights

கேப்டன் கோலி வீரர்கள் விஷயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கவுதம் காம்பீர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 
 

கேப்டன் கோலி வீரர்கள் விஷயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கவுதம் காம்பீர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் 4ம் வரிசை வீரருக்கான சிக்கலுக்கு மட்டும் தீர்வு கண்ட பாடில்லை. இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலிய தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடிய நிலையில், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பியதை அடுத்து கடைசி 2 போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ராயுடு நீக்கப்பட்ட நிலையில், மிடில் ஆர்டரில் சூழலை உணர்ந்து நிதானமாக ஆடும் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறக்கப்படலாம் என கருதப்படுகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது. 

இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் ராயுடு நீக்கப்பட்டது தவறான முடிவு என காம்பீர் விமர்சித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நன்றாக ஆடிய ராயுடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக நீக்கப்பட்டிருக்கக்கூடாது என்பது காம்பீரின் கருத்து. 

உலக கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஃபார்மில் இல்லாத தவான், மீண்டும் ஃபார்முக்கு வரும் விதமாக தொடர்ச்சியாக 19 போட்டிகளில் அணியில் ஆடவைக்கப்பட்டார். அதேநேரத்தில் ராயுடு விஷயத்தில் அப்படி செய்யவில்லை. ராயுடு ஒருசில போட்டிகளில் சொதப்பியதுமே அணியிலிருந்து நீக்கிவிட்டனர். 

இதுகுறித்த அதிருப்தியையும் விமர்சனத்தையும் கடைசி போட்டியின் வர்ணனையின் போது காம்பீர் வெளிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய காம்பீர், ராயுடு எந்த தவறுமே செய்யவில்லை. நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடரில் ராயுடு சிறப்பாகவே ஆடினார். அப்படியிருக்கையில், ஒருசில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. தவானுக்கு 19 போட்டிகளில் ஆட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராயுடுவுக்கு வெறும் 3 போட்டிகள்தான். ஒரு கேப்டன் என்பவர், அனைத்து வீரர்களையும் சமமாக பார்க்க வேண்டும். உலக கோப்பைக்கு முன் தவான் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கிவிட்டு ராயுடுவிற்கு போதுமான வாய்ப்புகளை வழங்காதது சரியான செயல் அல்ல என்று கேப்டன் கோலியை காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

click me!