ஐசிசி அதோட வேலைய மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்.. தோனிக்காக வரிந்துகட்டிய கவுதம் காம்பீர்

Published : Jun 08, 2019, 04:27 PM IST
ஐசிசி அதோட வேலைய மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்.. தோனிக்காக வரிந்துகட்டிய கவுதம் காம்பீர்

சுருக்கம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார்.   

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வெற்றியுடன் தொடரை தொடங்கியது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார். 

ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளௌசிலிருந்து அந்த குறியீட்டை நீக்க தோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது. 

இந்த விஷயத்தில் ரசிகர்களும் பிரபலங்களும் தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜுவும் கூட் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். பிசிசிஐ-யும் கூட தோனிக்கு ஆதரவாகவே இருந்தது. தோனி க்ளௌசில் பாலிடன் குறியீட்டை பயன்படுத்த ஐசிசி-யிடம் அனுமதி கோரியது பிசிசிஐ. 

ஆனால் ஐசிசி அனுமதியளிக்க மறுத்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோனியின் க்ளௌசில் இருந்த குறியீடு இனிமேல் ஆடும் போட்டிகளில் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஐசிசி தொடர்களில் இதுபோன்ற தனிப்பட்ட முறையிலான மெசெஜ் அல்லது லோகோ ஆகியவற்றை வீரர்களோ, அணி நிர்வாகிகளோ பயன்படுத்தக்கூடாது. எனவே இனிவரும் போட்டிகளில் தோனி அந்த லோகோவை பயன்படுத்தக்கூடாது என்று ஐசிசி தெரிவித்துவிட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரும் எம்பி-யுமான கவுதம் காம்பீர், போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டியதுதான் ஐசிசி-யின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களாக இல்லாமல் பவுலர்களுக்கும் சாதகமான ஆடுகளங்களை அமைப்பதுதான் ஐசிசி-யின் வேலை. எனவே அந்த வேலையை சரியாக பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத விஷயத்தை பெரிதாக்கக்கூடாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!