போனி செய்த கம்மின்ஸ்.. ரூட் - ராய் நிதான பேட்டிங்

Published : Aug 05, 2019, 04:34 PM IST
போனி செய்த கம்மின்ஸ்.. ரூட் - ராய் நிதான பேட்டிங்

சுருக்கம்

398 ரன்கள் என்ற கடின இலக்குடன் நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரத்திற்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது.   

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 374 ரன்களை குவித்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தும் மேத்யூ வேடும் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ஸ்மித் 142 ரன்களையும் வேட் 110 ரன்களையும் குவித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

398 ரன்கள் என்ற கடின இலக்குடன் நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரத்திற்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை என்ற நிலையில், ராயும் பர்ன்ஸும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் கம்மின்ஸ். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய பர்ன்ஸ் சதமடித்தார். இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பர்ன்ஸை சோபிக்கவிடாமல் கம்மின்ஸ் வீழ்த்திவிட்டார். 

இதையடுத்து ஜேசன் ராயுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இருவரும் நிதானமாக ஆடிவருகின்றனர். இவர்கள் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவது அவசியம். 
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?