கெய்ல்னா என்ன பெரிய கொம்பா..? இங்கிலாந்திடம் மரண அடி வாங்கிய வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Mar 9, 2019, 3:02 PM IST
Highlights

ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் அபாரமாக ஆடினார். அரைசதம் அடித்த ரூட் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சாம் பில்லிங்ஸ், 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், ஒருநாள் தொடர் 2-2 என சமனானது. இதையடுத்து டி20 தொடர் நடந்துவருகிறது. 

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முறையே 12 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டாலும் ஜோ ரூட் சிறப்பாக ஆடினார். இயன் மோர்கன் ஒரு ரன்னிலும் ஜோ டென்லி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த சாம் பில்லிங்ஸ் அபாரமாக ஆடினார். அரைசதம் அடித்த ரூட் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய சாம் பில்லிங்ஸ், 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்களை குவித்தது. 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஹெட்மயரும் பிராத்வெயிட்டும் அடித்த 10 ரன்கள் தான் அந்த அணி வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர். அந்த அணியின் பேட்டிங் வரிசை படுமோசமாக சரிந்தது. வெறும் 45 ரன்களுக்கே ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் விளாசி தொடர் நாயகன் விருது வென்ற கெய்ல், இந்த போட்டியில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்களில் ஆல் அவுட்டானதை அடுத்து இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2-0 என டி20 தொடரை வென்றது. ஆட்டநாயகனாக சாம் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!