ஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் செம பேட்டிங்..! முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 8, 2020, 11:17 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 219 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, வலுவான நிலையில் இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் 250-300 ரன்கள் அடித்திருந்தாலே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் நன்றாக ஆடி சதமடித்த ஷான் மசூத், அரைசதம் அடித்த பாபர் அசாம் என யாருமே 2வது இன்னிங்ஸில் சரியாக ஆடவில்லை. அதனால் வெறும் 169 ரன்களுக்கே சுருண்டது பாகிஸ்தான் அணி. 

முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றும், இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பி வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட பாகிஸ்தான் அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 277 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கியது இங்கிலாந்து. 

பாகிஸ்தான் பவுலர்கள் ஆரம்பத்தில் அருமையாக வீசி, ரோரி பர்ன்ஸ், சிப்ளி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை சொற்ப ரன்களில் வீழ்த்தினர். நன்றாக ஆடிய கேப்டன் ரூட்டையும் 42 ரன்களில் வீழ்த்தினர். ஓலி போப்பையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றியதையடுத்து, இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஆனால் அதன்பின்னர் ஜோஸ் பட்லரும் கிறிஸ் வோக்ஸும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். இருவருமே அண்மைக்காலமாக சொல்லும்படியாக எந்த இன்னிங்ஸும் ஆடாத நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர். ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் ஆகியோரின் ஃபாஸ்ட் பவுலிங் மற்றும் யாசிர் ஷா, ஷதாப் கானின் ஸ்பின் பவுலிங் என அனைவரது பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர்.

ஆறாவது விக்கெட்டுக்கு பட்லரும் வோக்ஸும் இணைந்து 139 ரன்கள் சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்து இலக்கை நெருங்கிய நிலையில், 75 ரன்களில் யாசிர் ஷாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிராடும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி வரை களத்தில் நின்ற கிறிஸ் வோக்ஸ் 84 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். 

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
 

click me!