பாகிஸ்தான் பவுலர்கள் அபாரம்.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை சொற்ப ரன்களில் சுருட்டினர்

By karthikeyan VFirst Published Aug 7, 2020, 8:06 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடி 326 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில்   ரன்களுக்கு சுருட்டியது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் ஷான் மசூத்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. ஷான் மசூத் 156 ரன்களை குவித்தார். பாபர் அசாம் 69 ரன்களையும் ஷதாப் கான் 46 ரன்களையும் அடித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 4 ரன்களிலும் சிப்ளி 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் ரன்னே அடிக்காமல் முகமது அப்பாஸின் பந்தில் கிளீன் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் ஜோ ரூட்டும் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 62 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஓலி போப்பும் ஜோஸ் பட்லரும் இணைந்து, நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் எஞ்சிய ஆட்டத்தை சிறப்பாக ஆடி முடித்தனர். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்திருந்தது.

46 ரன்களுடனும் களத்தில் இருந்த போப்பும் 15 ரன்களுடன் நின்ற பட்லரும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். அரைசதம் அடித்த போப் 62 ரன்களில் நசீம் ஷாவின் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரையும் முறையே 38 மற்றும் 19 ரன்களில் ரிஸ்ட் ஸ்பின்னர் யாசிர் ஷா வீழ்த்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டூவர்ட் பிராட் வழக்கம்போலவே சில பவுண்டரிகளை விளாசி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 170 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி, ஸ்டுவர்ட் பிராட் 29 ரன்கள் அடித்ததன் விளைவாக முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 217 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதை அந்த அணி சற்றும் எதிர்பார்த்திருக்காது. 

அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் சொதப்பியதாலும் பட்லர், போப் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறியதாலும் 217 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் பவுலர்கள் அபாரமாக வீசி இங்கிலாந்தை சுருட்டினர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் முகமது அப்பாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

109 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. 
 

click me!