India vs West Indies: ரோஹித் எடுத்த அந்த துணிச்சலான முடிவுதான் வெற்றிக்கு காரணம்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்

Published : Feb 10, 2022, 02:47 PM IST
India vs West Indies: ரோஹித் எடுத்த அந்த துணிச்சலான முடிவுதான் வெற்றிக்கு காரணம்..! தினேஷ் கார்த்திக் புகழாரம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த துணிச்சலான முடிவுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்று தினேஷ் கார்த்திக், ரோஹித்தின் கேப்டன்சியை புகழ்ந்து பேசியுள்ளார்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

ரோஹித் சர்மா முழு நேர கேப்டனான பிறகு அவரது தலைமையில் இந்திய அணி ஜெயிக்கும் முதல் ஒருநாள் தொடர் இதுதான். ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. ஐபிஎல்லில்  5 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்திய அணியை வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்தவர் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மாவின் களவியூகங்கள், ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாளும் விதம், சாமர்த்தியமான/சமயோசித/துணிச்சலான முடிவுகள் ஆகியவைதான் அவரது தலைமையிலான அணி வெற்றிகளை பெற காரணம்.

அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் எடுத்த துணிச்சலான முடிவை புகழ்ந்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 237 ரன்கள் அடிக்க, 238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 159 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் ஒடீன் ஸ்மித் அதிரடியாக ஆடி அச்சுறுத்தினார். 44 ஓவர்களில் 189 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 36 பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சூழலில், 45வது ஓவரை ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரிடம் கொடுத்தார் ரோஹித் சர்மா. சுந்தர் மீது நம்பிக்கை வைத்து ரோஹித் அந்த ஓவரை கொடுக்க, அந்த ஓவரில் ஒடீன் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் சுந்தர். அதன்பின்னர் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரிடம் பந்தை கொடுத்த ரோஹித்தின் துணிச்சலான முடிவை வெகுவாக புகழ்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், 45வது ஓவரில் சுந்தரை பந்துவீச அழைத்த ரோஹித்தின் முடிவை நான் வெகுவாக ரசித்தேன். அது துணிச்சலான முடிவு. அடித்து ஆடக்கூடிய வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தபோது, ஆஃப் ஸ்பின்னரான சுந்தரை ரோஹித் சர்மா பந்துவீச அழைத்தது சுவாரஸ்யமான முடிவு. சுந்தர் அழுத்தமான சூழல்களை ரசித்து எதிர்கொள்வார். அந்த மாதிரி சூழலில் பந்துவீச திறமை தேவை. அப்போதுதான் கேப்டனுக்கும் பவுலருக்கும் இடையேயான நல்லுறவு உருவாகிறது என்று தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!