#ICCWTC ஃபைனலில் மோதும் #INDvsNZ எந்த அணி பலமான அணி..? முன்னாள் வீரர் அதிரடி

Published : Jun 05, 2021, 08:12 PM IST
#ICCWTC ஃபைனலில் மோதும் #INDvsNZ எந்த அணி பலமான அணி..? முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதும் இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகளில் எது பலம் வாய்ந்த அணி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கருத்து கூறியுள்ளார்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், இரு அணிகளில் எந்த அணி பலம் வாய்ந்த அணி என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார், இந்தியா - நியூசிலாந்து அணிகளின் வீரர்களை நேருக்கு நேராக ஒப்பிட்டால் இந்திய அணி தான் சிறந்த அணி. நியூசிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த பவுலர் டிரெண்ட் போல்ட், தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால் இந்திய அணி தான் ஆல்ரவுண்ட் டீம். இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்கள் உள்ளனர். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகிய தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர். 

இந்திய அணியில் திறமையான வீரர்கள் நிறைய உள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடியாக வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவரை மட்டும் சார்ந்திருக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைவருமே பங்களிப்பு செய்ய வேண்டும் என்று திலீப் வெங்சர்க்கார் கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Mental Health: 'நான் ஒரு போலி'னு தோணுது! - மனநலம் பற்றி கோலி ஓபன் டாக்
Vaibhav Suryavanshi: அந்த 'A' செலிப்ரேஷன்... சீக்ரெட்டை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!