உலக கோப்பையில் ஆடும் லெவனில் அவரு கண்டிப்பா இருக்கணும்!! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி

By karthikeyan VFirst Published May 17, 2019, 5:19 PM IST
Highlights

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர். 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 13 நாட்களே உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர். இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இந்திய அணியை பொறுத்தமட்டில் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் அபாரமாக உள்ளது. மிடில் ஆர்டரில் நான்காம் வரிசையில் விஜய் சங்கர் அல்லது ராகுல் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், பல முன்னாள் வீரர்களும் இன்னும் நான்காம் வரிசை பேட்டிங் குறித்த தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.  இந்நிலையில், உலக கோப்பை அணி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார், நான்காம் வரிசையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனைத்தான் இறக்க வேண்டும். ராகுல் ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரர் என்பதால், தொடக்க விக்கெட்டுகள் விரைவில் விழும்பட்சத்தில் ராகுல் சிறப்பாக ஆடி அணிக்கு வலுசேர்ப்பார். எனவே ராகுலை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுத்து நான்காம் வரிசையில் ஆடவைக்க வேண்டும் என திலீப் தெரிவித்துள்ளார். 

click me!