#IPL2021 பயிற்சியில் பந்துகளை பறக்கவிட்ட தோனி..! சிக்ஸர் மழை வீடியோ

Published : Apr 05, 2021, 05:22 PM IST
#IPL2021 பயிற்சியில் பந்துகளை பறக்கவிட்ட தோனி..! சிக்ஸர் மழை வீடியோ

சுருக்கம்

வலைப்பயிற்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி சிக்ஸர் மழை பொழிந்துள்ளார். அந்த வீடியோவை சிஎஸ்கே அணி சமூகவலைதளங்களில் பகிர, அது செம வைரலாகிவருகிறது.  

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. கடந்த சீசனில் ரெய்னா ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்த நிலையில், இந்த சீசனில் ரெய்னா ஆடுவது சிஎஸ்கே அணிக்கு பலமாக அமையும்.

சிஎஸ்கே அணி முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை வரும் 10ம் தேதி எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் வாங்கிய அடிக்கும் சேர்த்து இந்த சீசனில் பெரும் வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே அணி, முதல் அணியாக பயிற்சியை தொடங்கிய தீவிர பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி மும்பைக்கு சென்று, அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சியில் கேப்டன் தோனி பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக அடித்து சிக்ஸர்களை தெறிக்கவிட்டார். அந்த வீடியோவை சிஎஸ்கே அணி, இன்ஸ்டாகிராமில் பதிவிட, அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.

ஐபிஎல்லுக்கு முன் தோனி நல்ல ஃபார்மில் இருப்பது, அந்த அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

CSK New Coach: சிஎஸ்கே-வுக்கு புதிய கோச் ராகுல் டிராவிட்டா? 3 வருஷமா ப்ளே ஆஃப் போகாததுதான் காரணமா?
ICC World Cup: ஐபிஎல் மாடல் எலிமினேட்டர், சூப்பர் 7... இனி இப்படித்தான் ஐசிசி உலகக்கோப்பை!