சேப்பாக்கத்தில் மரண மாஸ் காட்டிய தோனி!! ஸ்டேடியத்திற்கு வெளியே போன பந்து.. வீடியோவ பாருங்க.. தல செம வெறியில இருக்காரு போல

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 5:24 PM IST
Highlights

அபாரமான ஷாட்டின் மூலம் பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே தோனி அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழும் தோனி தலைமையிலான சிஎஸ்கே மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.
 
வரும் 23ம் தேதி 12வது சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்முறையாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் யுவராஜ் சிங், வலைப்பயிற்சியில் முதல் பந்தையே பெரிய ஷாட் ஆடிய வீடியோவை அந்த அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது.

இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி, வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை அந்த அணி அண்மையில் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது. பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் சற்று திணறும் தோனி, ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு பயிற்சி எடுத்தார். அப்போது சில பெரிய ஷாட்டுகளை அடித்து பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில், தற்போது தோனியின் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், வலைப்பயிற்சியில் தோனி அடித்த ஷாட், ஸ்டேடியத்தின் மேற்கூரையின் மேல் சென்று விழுந்தது. ஸ்பின் பவுலிங்கை தோனி அபாரமாக ஆடிய அந்த ஷாட் தற்போது வைரலாகிவருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😍😍😍 . . V.c - @r_a_je_sh

A post shared by M S DHONI ❄️ (@msdians.talks) on Mar 18, 2019 at 2:40am PDT

click me!