CSK vs KKR: விண்டேஜ் தோனியாக மாறி செம காட்டு காட்டிய ”தல” அரைசதம்.. கேகேஆர் அணி செம பவுலிங்

Published : Mar 26, 2022, 09:29 PM IST
CSK vs KKR: விண்டேஜ் தோனியாக மாறி செம காட்டு காட்டிய ”தல” அரைசதம்.. கேகேஆர் அணி செம பவுலிங்

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 131 ரன்கள் அடித்து, 132  ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே.  

ஐபிஎல் 15வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. மும்பை வான்கடேவில் நடக்கும் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியும் ஆடிவருகின்றன.

இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஜடேஜா(கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), பிராவோ, மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேகேஆர் அணி சார்பில் முதல் பந்தையே நோ பாலாக வீசிய உமேஷ் யாதவ், ஃப்ரீ ஹிட்டில் ரன்னே கொடுக்காமல் அருமையாக வீசினார். 3வது பந்திலேயே ருதுராஜை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ்.

இதையடுத்து டெவான் கான்வேவுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா அடித்து ஆடிக்கொண்டிருக்க, 8 பந்தில் 3 ரன்களுக்கு வெளியேறினார் டெவான் கான்வே. கான்வேவையும் உமேஷ் யாதவே வீழ்த்தினார். 

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ராபின் உத்தப்பா 28 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அம்பாதி ராயுடு 15 ரன்னில் ரன் அவுட்டானார். ஷிவம் துபே 3 ரன்னில் ஆட்டமிழக்க, 10.5 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே.

அதன்பின்னர் ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். டெத் ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடிய நிலையில், கடைசி 2 ஓவர்களில் தோனி பவுண்டரிகளை விளாசினார். விண்டேஜ் தோனியாக மாறி கடைசி 2 ஓவரில் அடி வெளுத்து வாங்கினார். 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய தோனி, கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து 38 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார். 

இதையடுத்து 20 ஓவரில் 131 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 132 ரன்கள் என்ற எளிய இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது. கேகேஆர் அணி பவுலர்கள் அபாரமாக பந்துவீசி சிஎஸ்கேவை 131 ரன்களுக்கு சுருட்டினர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs IRE 2nd T20: வேஸ்ட் லக்கேஜ்! இந்திய அணியில் 3 ஸ்டார் வீரர்கள் நீக்கம்! பிளேயிங் லெவன்!
India vs Ireland: அயர்லாந்துக்கு ஜாக்பாட், இந்தியாவுக்கு ஷாக்! தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்