கொரோனா ஊரடங்கு: மகளுடன் ஜாலியா பைக்கில் ரவுண்டடிக்கும் தோனி.. வைரல் வீடியோ

Published : Apr 27, 2020, 09:05 PM IST
கொரோனா ஊரடங்கு: மகளுடன் ஜாலியா பைக்கில் ரவுண்டடிக்கும் தோனி.. வைரல் வீடியோ

சுருக்கம்

ஊரடங்கால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் தோனி தனது மகள் ஸிவாவுடன் பைக்கில் வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ளேயே ஜாலியாக ரவுண்டடிக்கும் வீடியோ வைரலாகிவருகிறது.   

இந்திய அணியின் சீனியர் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவேயில்லை. நடப்பாண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயரே இடம்பெறவில்லை. தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. எனவே தோனி மீண்டும் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதா? டி20 உலக கோப்பைக்கான அணியில் ஆடுவாரா என்பதுதான் ஹாட் டாபிக்காக உள்ளது. 

ஆனால் தோனி அதைப்பற்றியல்லாம் கவலைப்படுவதேயில்லை. கொரோனா ஊரடங்கால் ஐபிஎல் உட்பட அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடிவருகின்றனர். 

தோனியும் அவரது மகள் ஸிவாவும் சேர்ந்து செய்யும் எந்த செயலும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடும். சமூக வலைதளங்களில் தோனியின் மகள் ஸிவா ரொம்ப பிரபலம். அந்த வகையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தோனியும் அவரது மகளும் பைக்கில் ரவுண்டடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தோனி தனது மகளை பைக்கில் அமரவைத்து வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ளேயே ரவுண்டடிக்கிறார். அதை வீடியோவாக எடுத்து, தோனியின் மனைவி சாக்ஸி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனியும் அவரது மகளும் என்ன செய்தாலும் வைரலாகும். அப்படியிருக்கையில் இது மட்டும் மிஸ்ஸாகுமா என்ன? இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!