ஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரியவருக்கு நேர்ந்த கதி

Published : Jul 27, 2019, 04:03 PM IST
ஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரியவருக்கு நேர்ந்த கதி

சுருக்கம்

ஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரி சுதிர் ஷர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார். ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் விலைக்கு விற்கப்படுவது, மனிதர்களை கடத்தி விற்கும் அவலத்திற்கு வழிவகுக்கிறது. எனவே ஐபிஎல் ஏலத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.   

உலகளவில் பல டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் ஐபிஎல் தான் பணப்புழக்கம் அதிகமுள்ள தொடராகவுள்ளது. அதிகளவில் ஊதியம் கொடுக்கப்படும் ஐபிஎல்லில் ஆடத்தான் வெளிநாட்டு வீரர்களும் விரும்புகின்றனர். 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. இந்நிலையில், ஐபிஎல் ஏலத்திற்கு தடை கோரி சுதிர் ஷர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார். ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் விலைக்கு விற்கப்படுவது, மனிதர்களை கடத்தி விற்கும் அவலத்திற்கு வழிவகுக்கிறது. எனவே ஐபிஎல் ஏலத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் அமர்வு, இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல் இது பொதுநல மனு அல்ல; விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக உள்ளது எனக்கூறி அந்த மனுவை தாக்கல் செய்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதித்தது. 
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!