ஐபிஎல் 2019: கெத்தான முன்னாள் கேப்டனை ஆலோசகராக நியமித்த டெல்லி கேபிடள்ஸ்!! உற்சாகத்தில் இளம் வீரர்கள்

By karthikeyan VFirst Published Mar 14, 2019, 4:41 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ்(முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்), ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த மூன்று அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 
 

இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா 2 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. 

டெல்லி கேபிடள்ஸ்(முன்பு டெல்லி டேர்டெவில்ஸ்), ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதனால் இந்த மூன்று அணிகளுமே இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

அதற்காக இந்த அணிகள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர்கள் நியமனம் என தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணி, முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட ஒரு அணி. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். கடந்த சீசனில் முதலில் சில போட்டிகளில் சரியாக ஆடாததை அடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய காம்பீர், பின்னர் அப்படியே ஒதுங்கினார். அதையடுத்து அந்த அணி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆடிவருகிறது. 

டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சர்வதேச அளவில் மிகச்சிறந்த வெற்றிகரமான முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் உள்ளார். இந்நிலையில், இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராக நியமித்துள்ளது.

 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் கங்குலி. பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் உலகில் கோலோச்சிய காலத்தில் அந்த அணிக்கு கடும் சவாலாக இருந்தது கங்குலி தலைமையிலான இந்திய அணிதான். இந்நிலையில், கங்குலியும் பாண்டிங்கும் இணைந்து டெல்லி கேபிடள்ஸ் அணியை வழிநடத்த உள்ளனர். 
 

click me!