கொரோனா பீதிக்கு மத்தியில் டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்

By karthikeyan VFirst Published May 25, 2020, 8:03 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க அந்த அணியின் தொடக்க வீரர் தயாராகவுள்ளார்.
 

தென்னாப்பிரிக்க அணிக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தவிதமான கிரிக்கெட்டுமே கடந்த ஒன்றரை ஆண்டாக சரியாக இல்லை. டுப்ளெசிஸ் கேப்டன்சியில் அந்த அணி தொடர் தோல்விகளை தழுவியது. 

2019 உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது, அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. டுப்ளெசிஸ் கேப்டன்சியில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், புதிய கேப்டனின் தலைமையில் அணிக்கு புத்துணர்ச்சியூட்டும் கட்டாயம் ஏற்பட்டது. 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்ததையடுத்து, அந்த தோல்விக்கு பொறுப்பேற்று, மூன்றுவிதமான அணிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து டுப்ளெசிஸ் விலகினார். இதையடுத்து தென்னாப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டார். 

ஆனால் டெஸ்ட் அணிக்கு அவர் கேப்டனாக்கப்படவில்லை. டி காக் மீது அதிகமான அழுத்தத்தை கொடுக்க விரும்பவில்லை என்றும், அதனால் தான் டெஸ்ட் கேப்டன்சியை அவருக்கு வழங்கவில்லை என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் க்ரேம் ஸ்மித் தெரிவித்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பை எதிர்நோக்கியிருக்கிறார், அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர். 33 வயதான டீன் எல்கர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பு கிடைத்தால், அதை ஏற்று செயல்பட தயாராக இருப்பதுடன், கேப்டன்சி பொறுப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய டீன் எல்கர், டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பது சாதாரண காரியமல்ல. ஆனால் இயல்பாகவே எனக்குள் தலைமைத்துவ பண்புகள் இருப்பதாக நினைக்கிறேன். கடந்த காலங்களில் பல அணிகளை கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறேன். கேப்டன்சி செய்வதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை கேப்டன் பொறுப்பை ஏற்க சொன்னால், கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் ஏற்று சிறப்பாக செயல்படுவேன் என்று டீன் எல்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!