ஆர்சிபி அணியை படுமோசமா பங்கம் செய்த வார்னர்..! இதைவிட கேவலமா அசிங்கப்படுத்த முடியாது

By karthikeyan VFirst Published Aug 1, 2020, 8:42 PM IST
Highlights

ஆர்சிபி அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நக்கலடித்துள்ளார். 
 

ஆர்சிபி அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நக்கலடித்துள்ளார். 

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளாக 4 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும் திகழ்கின்றன. கேகேஆர் அணி 2 முறை வென்றுள்ளது. டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016ம் ஆண்டு வென்றது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009ம் ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ம் ஆண்டு ஒவ்வொரு முறை வென்றன. 

ஐபிஎல்லில் ஆடும் அணிகளில் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகள் தான் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகள். 

இதில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாததுதான் வியப்பு. விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற சமகாலகத்தின் 2 சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும், ஒவ்வொரு சீசனிலும் மோசமான அணி தேர்வின் காரணமாக, சரியான அணி காம்பினேஷன் அமையாததால் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

ஒவ்வொரு சீசனிலும் முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே அந்த அணி ஆடிவருகிறது. ஆனால் அதுமட்டும் நடக்கவேயில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் வீரர்களும் தயாராகிவருகின்றனர். 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரருமான டேவிட் வார்னர், இந்த முறை எந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று தனது இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் பலரும் பல பதில்களை தெரிவித்தனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Who’s winning this years @iplt20 @sunrisershyd 😜😜 Thoughts!!

A post shared by David Warner (@davidwarner31) on Aug 1, 2020 at 4:11am PDT

அதில் ஒருவர் ஆர்சிபி என்று தெரிவித்திருந்தார். மற்ற அணிகளின் பெயரை சொன்னதற்கெல்லாம் மதிப்பு கொடுத்த வார்னர், ஆர்சிபி என்று சொன்னவரிடம், உண்மையாகவா..? என்று நக்கலாக கேள்வியெழுப்பியுள்ளார். ஆர்சிபி ஐபிஎல் டைட்டிலை வெல்லும் என்று சொன்னாலே கிண்டலடிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டது ஆர்சிபி அணியின் நிலை. 

2016ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியிடம் இறுதி போட்டியில் தோற்றுத்தான் ஆர்சிபி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!