மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று டெல்லி கேபிடல்ஸ் வீரர் டேவிட் வார்னர் பதிவிட்ட இன்ஸ்டா போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
Image Credits by: @poster_cutz
மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஆனால், டெல்லி கூட ஒரு போட்டியில் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது. மேலும், அவே அணி வெற்றி பெறுகிறது என்ற ஐபிஎல் டிரெண்ட் முறையில் பார்த்தால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 40 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியில் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று தடுமாறி வருகிறது. ஹர்திக் பாண்டியா மீது எதிர்மறை விமர்சனம் எழுந்து வருகிறது. மேலும், அவரது செயல்பாடு ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வரிசையாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், இன்னும் ஓரிரு போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால், கேப்டன் பொறுப்பு மாற்றப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நக்கல் மன்னன் என்று சொல்லப்படும் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டா பதிவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர், மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் வந்த அய்யப்பனும் கோஷியும் என்ற பட போஸ்டர் போன்று போலீஸ் அதிகாரியாக டேவிட் வார்னர் இருப்பது போன்றும், பிருத்விராஜாக ஹர்திக் பாண்டியா இருப்பது போன்ற போஸ்ரை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, MI vs DC போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன், நீங்கள் என்று பதிவிட்டுள்ளார். வார்னர் பதிவிட்ட இந்த போஸ்டரை அனூப் எம் தாஸ் டிசைன் செய்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டா (@anoopmdas_official) பதிவில் பதிவிட்டிருந்த நிலையில் வார்னர் அதனை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டேவிட் வார்னர் மனிதாபிமானம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர். இந்தியா வரும் போதெல்லாம் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுப்பது, மைதானத்தில் புஷ்பா பட பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, அரைசதம் அடிக்கும் போதும், சதம் அடிக்கும் போதும் புஷ்டா ஸ்டைலில் கொண்டாடுவது என்று எப்போதும் ஜாலியாக இருப்பார். மேலும், சென்னையில் வெள்ளம் வந்த போது தனது இன்ஸ்டா பதிவின் மூலமாக ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.