தென்னாப்பிரிக்க அணியை கிண்டல் செய்த இந்திய ரசிகரை முட்டாள்னு திட்டிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Dec 31, 2019, 3:55 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியை நக்கலடித்த இந்திய கிரிக்கெட் ரசிகரை முட்டாள் என்று டேல் ஸ்டெய்ன் கடும் காட்டமாக திட்டியுள்ளார். 

தென்னாப்பிரிக்க அணி, டிவில்லியர்ஸ், ஹாஷிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன் மற்றும் மோர்னே மோர்கல் ஆகிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஓராண்டுக்குள்ளாக வரிசையாக ஓய்வு பெற்றதால், அவர்களது இடங்களை உடனடியாக நிரப்ப முடியாமல் தொடர் தோல்விகளை தழுவிவந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான கம்பேக் கொடுத்தது. 

உலக கோப்பையில் படுதோல்வி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் என்று தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு ரொம்ப முக்கியமானது. 

தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்திருந்தார் டேல் ஸ்டெய்ன். அந்த டுவீட்டில், மார்க் பவுச்சரும் ஃபாஃப் டுப்ளெசிஸும் எவ்வளவு வெற்றி வேட்கையில் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. க்ரேம் ஸ்மித் தலைமையில் நான் ஆடியபோது இருந்த தென்னாப்பிரிக்க அணியிடம் இருந்த வெற்றி வேட்கையை இந்த அணியிடம் பார்த்தேன் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். 

Well done to the Proteas!
Mark and Faf seem to have put together a team that looks hungry, has fight, but above all look menacing with real intent towards their skill.
All characteristics that I grew up with when I played under Smith and co.
Gr8 to see the boys back!

— Dale Steyn (@DaleSteyn62)

அதற்கு, இந்தியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர், சொந்த மண்ணில் ஜெயித்துவிட்டு இவ்வளவு ஆட்டமா என்கிற ரீதியில் நக்கலாக டுவீட் செய்திருந்தார். அதைக்கண்டு செம கடுப்பான டேல் ஸ்டெய்ன், இந்திய அணியும் இந்தியாவில் தான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.. முட்டாள் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். 

I guess India in India also doesn’t count then either...
And just by the way, God has nothing to do with this. Idiot

— Dale Steyn (@DaleSteyn62)
click me!