#IPL2021 #CSKvsMI ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆடல.. டாஸ் வென்ற தோனியின் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Sep 19, 2021, 7:37 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் இன்று முதல் நடக்கின்றன. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அதனால் பொல்லார்டு கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 சிஎஸ்கே அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவும் ஆடவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங், பொல்லார்டு(கேப்டன்), சவுரப் திவாரி,  பொல்லார்டு(கேப்டன்), க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!