ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இன்னும் 6 நாட்களில் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், பாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது சென்னையின் கோட்டை என்று அழைக்கப்படும் சேப்பாக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
இதற்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை தவிர பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ ஆகிய பகுதிகளில் சிஎஸ்கே விளையாடும் போட்டியை பார்ப்பதற்கே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அப்படியிருக்கும் போது முதல் போட்டியே சென்னை சேப்பாக்கத்தில் என்றால் சும்மா விடுவார்களா? எப்போது தோனியை பார்ப்போம், சிஎஸ்கே விளையாடும் போட்டியை பார்ப்போம் என்று ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
🚨 Tickets for CSK vs RCB Match
Date - 18th March
Time - 9.30AM
Portal - Patym and Insider pic.twitter.com/sVV5IR912j
கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையானது வரும் 18ஆம் தேதி ஆன்லைனில் தொடங்க இருக்கிற்து. மேலும், டிக்கெட்டின் ஆரம்ப விலையானது ரூ.1700 முதல் அதிகபட்ச விலையானது ரூ.7500 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனையானது தொடங்குகிறது. PAYTM மற்றும் Insider மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்
🚨Chepauk Tickets booking for CSK vs RCB will start on March 18th
The prices are given below:
C lower-1700
D lower - 1700
E lower-1700
C upper -4000
D upper -4000
E upper- 4000
I upper -4000
J upper -4000
K upper-4000
I lower -4500
J lower-4500
K lower-4500
KMK terrace-7500 pic.twitter.com/7K9zKde5s9