தனி ஒருவனாக சிஎஸ்கேவை கரைசேர்த்த ருதுராஜ் கெய்க்வாட்.. அதிரடி அரைசதம்..! பிராவோவும் அதிரடி பேட்டிங்

By karthikeyan VFirst Published Sep 19, 2021, 10:01 PM IST
Highlights

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிராவோவின் அதிரடியால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 157 ரன்களை மும்பைக்கு இலக்காக நிர்ணயித்தது.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதி இன்று முதல் நடக்கின்றன. இன்றைய போட்டியில் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முழு ஃபிட்னெஸுடன் இல்லாத காரணத்தால் இன்றைய போட்டியில் ஆடவில்லை. மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஆடவில்லை. 

மும்பை இந்தியன்ஸ் அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங், பொல்லார்டு(கேப்டன்), சவுரப் திவாரி,  பொல்லார்டு(கேப்டன்), க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

சிஎஸ்கே அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸை முதல் ஓவரிலேயே டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் டிரெண்ட் போல்ட். இதையடுத்து களத்திற்கு வந்த மொயின் அலியை 2வது ஓவரில் டக் அவுட்டாக்கி அனுப்பிய ஆடம் மில்னே, அதே ஓவரிலேயே அம்பாதி ராயுடுவுக்கு கையில் அடியை போட்டார். 

ஆடம் மில்னே வீசிய பந்து இன்ஸ்விங் ஆகி உள்ளே வந்து அம்பாதி ராயுடுவின் கையை தாக்கியது. அதனால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி செல்ல, அதன்பின்னர் களத்திற்கு வந்த ரெய்னா 4 ரன்னில் டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, 3 ஓவரில் வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தோனியும் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்தும், அதேவேளையில் அதிரடியாகவும் ஆடிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து நன்றாக ஆடிய ஜடேஜா 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த பிராவோ, அதிரடியாக ஆடி 8 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்தார்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடிக்க, 20 ஓவரில் 156 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி. கெய்க்வாட் 58 பந்தில் 88 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். 157 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணி விரட்டிவருகிறது. 
 

click me!