அந்த பையன் இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார்..! இளம் வீரர் மீது தேர்வுக்குழு தலைவர் நம்பிக்கை

Published : Jan 01, 2022, 04:44 PM IST
அந்த பையன் இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார்..! இளம் வீரர் மீது தேர்வுக்குழு தலைவர் நம்பிக்கை

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது. ஜனவரி 19, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளாததால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் ஒருநாள் அணியில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர். 

இந்திய ஒருநாள் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக ஆடி 635 ரன்களை குவித்து, 14வது சீசனில் அதிகபட்ச ரன் ஸ்கோரராக அந்த சீசனை முடித்தார் ருதுராஜ் கெய்க்வாட். அதன் பலனாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார் கெய்க்வாட். அண்மையில் நடந்த உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில் 4 சதங்களுடன் அதிகபட்சமாக 603 ரன்களை குவித்து, தன்னை ஒதுக்கமுடியாத அளவிற்கான அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் ருதுராஜ். அதன் பலனாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணியில் எடுத்தது குறித்து பேசிய தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா, சரியான நேரத்தில் ருதுராஜ் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். டி20 அணியில் ஏற்கனவே இடம்பிடித்துவிட்டார். இப்போது ஒருநாள் அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவர் கண்டிப்பாக இந்திய அணிக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார் என தேர்வாளர்களாகிய நாங்கள் நம்புகிறோம். 

நாங்கள் ருதுராஜை இந்திய அணியில் எடுத்துவிட்டோம். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிப்பதும், அளிக்காததும் அணி நிர்வாகத்தின் முடிவு. அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டு அணி நிர்வாகம் தான் ருதுராஜை ஆடவைப்பது குறித்து முடிவெடுக்கும். டி20 அணியில் இடம்பெற்று நன்றாக ஆடியதன் பலனாக ஒருநாள் அணியிலும் ருதுராஜ் இடம்பெற்றுள்ளார் என்று சேத்தன் ஷர்மா கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!