பர்ன்ஸின் முதல் சர்வதேச சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

Published : Aug 03, 2019, 10:08 AM IST
பர்ன்ஸின் முதல் சர்வதேச சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

சுருக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியின் 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்துள்ளது.  

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித்தை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியின் 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் அடித்துள்ளது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பர்ன்ஸுடன்  கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இருவருமே அரைசதம் கடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 132 ரன்களை சேர்த்தனர். களத்தில் நன்கு நிலைத்து நின்ற ரூட், 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டென்லி 18 ரன்களிலும் பட்லர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டென்லி, பட்லர் விக்கெட்டுகள் விரைவில் விழுந்தாலும் அடுத்ததாக பர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 

பர்ன்ஸ் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 125 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: வெறும் 4 மேட்ச்... ஆனா அடி இடி மாதிரி..! ICC 'தொடர் நாயகன்' ரேஸில் சஞ்சு சாம்சன்..
கிவிஸின் 'சாபத்தை' உடைக்குமா நீலப்படை? - இந்தியாவின் வெற்றியை கணிக்க உதவும் 4 லக்கி ஃபேக்டர்ஸ்!