விஜய் சங்கரின் காயம் குறித்த முக்கியமான அப்டேட்

By karthikeyan VFirst Published Jun 21, 2019, 2:09 PM IST
Highlights

தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து விஜய் சங்கரும் காயமடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளையும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணி நன்றாக ஆடிவரும் நிலையில், வீரர்களின் காயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் கை கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் உலக கோப்பை தொடரிலிருந்தே விலகியுள்ளார் தவான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. பயிற்சியின்போது பும்ரா வீசிய யார்க்கரில் விஜய் சங்கரின் காலில் சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சியில் இருந்து பாதியில் விஜய் சங்கர் வெளியேறினார். தவான், புவனேஷ்வர் குமாரை தொடர்ந்து விஜய் சங்கருக்கும் காயம் ஏற்பட்டது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், விஜய் சங்கருக்கு பெரிய காயம் எதுவும் இல்லை எனவும் அவர் நன்றாக இருப்பதாகவும் பும்ரா தெரிவித்துள்ளார். பும்ராவின் கூற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 
 

click me!