ஆஸி.,யில் ஃபேர்வெல் பார்ட்டி: இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய கவாஸ்கர் கட்டிப்பிடித்து ஜெயிச்சுட்டோம் என்ற லாரா

By karthikeyan VFirst Published Jan 24, 2021, 7:00 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் சேனல் 7 சார்பில் நடத்தப்பட்ட ஃபேர்வெல் பார்ட்டியில், இந்திய அணியின் வெற்றியை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியர்களுடன் கொண்டாடினார். கவாஸ்கரை கட்டிப்பிடித்து, ஜெயிச்சுட்டோம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரயன் லாரா.
 

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக 2018-2019 சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, இந்த சுற்றுப்பயணத்தில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

அதுவும் விராட் கோலி, ஷமி, பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகிய அணியின் முன்னணி நட்சத்திர வீரர்கள் யாருமே ஆடாத நிலையில், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சிராஜ், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்களை வைத்துக்கொண்டு, 33 ஆண்டுகளில் முதல் முறையாக பிரிஸ்பேனில் ஆஸி.,யை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றதுடன், 2வது முறையாக டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்தது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவருகின்றனர். அந்தவகையில் இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் வெற்றியை, அந்த தொடரை ஆஸி.,யில் ஒளிபரப்பிய சேனல் 7 தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஃபேர்வெல் பார்ட்டியில், அதில் வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆஸ்திரேலியர்களுடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

சேனல் 7ன் ஃபேர்வெல் பார்ட்டி கொண்டாட்ட புகைப்படங்களை சுனில் கவாஸ்கர் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிற்கு பகிர்ந்துள்ளார். அந்த கொண்டாட்டத்தின்போது, சக வர்ணனையாளரும் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனுமான பிரயன் லாரா, தன்னை கட்டிப்பிடித்து ஜெயிச்சுட்டோம் என்று கூறியதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ இதோ..

"

click me!