அந்த பையன் இந்திய அணியின் மிகப்பெரிய பலம்!! தாறுமாறா பாராட்டிய கோச்

By karthikeyan VFirst Published Mar 13, 2019, 10:14 AM IST
Highlights

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தின் அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு ஃபார்மில் இல்லாதது அணிக்கு ஏமாற்றம்தான்.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 

நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தின் அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு ஃபார்மில் இல்லாதது அணிக்கு ஏமாற்றம்தான் என்றாலும், தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவது அணிக்கு பலம். 

மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் அருமையாக ஆடுகிறார். கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி இறுதி போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய விஜய் சங்கர், பின்னர் ராகுல் டிராவிட் பயிற்சியளிக்கும் இந்தியா ஏ அணியில் ஆடினார். டிராவிட்டின் ஆலோசனைகளை பெற்று பேட்டிங்கில் தேர்ந்தவராக மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர், நியூசிலாந்து தொடர் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் தொடரிலும் சிறப்பாக ஆடிவருகிறார். அவரது பேட்டிங், அவர் மீதான அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் விஜய் சங்கர், பவுலிங்கில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் நன்றாகவே வீசுகிறார். அவரது பவுலிங்கில் நாளுக்கு நாள் வேகம் கூடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அபாரமாக பந்துவீசி திரில் வெற்றி பெற செய்தார் விஜய் சங்கர். அப்போதே உலக கோப்பை அணியில் அவர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியானது. 

இந்நிலையில், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் விஜய் சங்கரை பாராட்டி பேசியுள்ளார். விஜய் சங்கர் குறித்து பேசிய பவுலிங் கோச் பரத் அருண், விஜய் சங்கர் முன்பைவிட இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் ஆடுகிறார். 4,6,7 ஆகிய என எந்த வரிசையிலும் சிறப்பாக பேட்டிங் ஆடுகிறார். அவர் மிகுந்த நம்பிக்கையை பெற்றிருப்பது, அவரது பவுலிங்கிலும் எதிரொலிக்கிறது. முன்பு 121-125 கிமீ வேகத்தில் வீசிய விஜய் சங்கர் தற்போது 130 கிமீ வேகத்தை எட்டிவிட்டார். பேட்டிங் - பவுலிங் என அனைத்து வகையிலும் அணியின் மிகப்பெரிய பலம் விஜய் சங்கர் என பரத் அருண் பாராட்டியுள்ளார். 
 

click me!