விட்டதை பிடித்த ஸ்டோக்ஸ்.. டெஸ்ட் அணியில் ப்ரமோஷன்

By karthikeyan VFirst Published Jul 28, 2019, 10:21 AM IST
Highlights

ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,17 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கிலாந்து அணி முதல் போட்டிக்கான அணியை மட்டும் அறிவித்துள்ளது. 

கிரிக்கெட்டின் பாரம்பரியமான ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. ஆஷஸ் தொடருக்கான 17 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. 

இங்கிலாந்து அணி முதல் போட்டிக்கான அணியை மட்டுமே அறிவித்துள்ளது. ஜேசன் ராய், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஸ்டோக்ஸ் இருந்தார். 2017ல் மது அருந்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால், அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருந்தது. 

அந்த விவகாரத்திற்கு பிறகு பென் ஸ்டோக்ஸின் கேரக்டரும் ஆட்டமும் முதிர்ச்சியடைந்தது. இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்வதற்கே ஸ்டோக்ஸ் தான் காரணம். உலக கோப்பை முழுவதிலும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோக்ஸ், இறுதி போட்டியில் தனி ஒருவனாக போராடி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். முதல் உலக கோப்பையை வெல்ல காரணமாகவும் திகழ்ந்தார். 

பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையிலும் முதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு மீண்டும் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு பட்லர் துணை கேப்டனாக இருக்கும் நிலையில், டெஸ்ட் அணிக்கு ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பென் ஸ்டோக்ஸ் தான் இங்கிலாந்து அணியின் இதயத்துடிப்பு என்றும், அவரை பெரிதாக சோபிக்கவிடாமல் தடுத்தால்தான் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல முடியும் என்று பாண்டிங் புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!