டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! செப்டம்பர் 7ம் தேதி அறிவிக்கிறது பிசிசிஐ

Published : Sep 02, 2021, 05:12 PM IST
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! செப்டம்பர் 7ம் தேதி அறிவிக்கிறது பிசிசிஐ

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை வரும் 7ம் தேதி பிசிசிஐ அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், இந்திய அணி வரும் 7ம் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் 15 வீரர்களும், 3 ரிசர்வ் வீரர்களும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், தவான், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா, தீபக் சாஹர், பும்ரா உள்ளிட்ட டி20 அணியின் நிரந்தர வீரர்கள் அனைவரும் 15 வீரர்களை கொண்ட மெயின் அணியில் இடம்பெறுவார்கள்.

இஷான் கிஷன், பிரித்வி ஷா மற்றும் ஒரு ஸ்பின்னர் என 3 வீரர்கள் ரிசர்வ் வீரர்களாக இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பிசிசிஐ வரும் 7ம் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!