#AUSvsIND பயிற்சியில் பட்டைய கிளப்பும் நடராஜன்..! பிசிசிஐயையே மிரண்டுபோய் பதிவிட்ட வீடியோ

By karthikeyan VFirst Published Jan 3, 2021, 7:42 PM IST
Highlights

தமிழகத்தை சேர்ந்த நடராஜன், ஆஸி., சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நிலையில் 3வது டெஸ்ட்டுக்கு முந்தைய பயிற்சியில், பின்பக்கமாக ஓடிச்சென்று நடராஜன் பிடித்த கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 

ஐபிஎல் 13வது சீசனில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக ஆஸி., சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் நெட் பவுலராக ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்ட நடராஜன், வருண் சக்கரவர்த்தியின் காயத்தால் டி20 அணியில் இடம்பெற்றார். டி20 போட்டியில் அருமையாக பந்துவீசியதால், ஒருநாள் அணியில் இடம்பெற்று, ஒருநாள் போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி அசத்தினார்.

டெஸ்ட் அணியின் நெட் பவுலராக இருந்த நடராஜன், 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறியதால், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பயிற்சியின்போது, மிக உயரத்தில் விடப்பட்ட த்ரோவை, பின்பக்கமாக ஓடிச்சென்று வெறித்தனமாக விரட்டி அருமையாக கேட்ச் பிடித்தார் நடராஜன். மிகக்கடினமான கேட்ச்சை நடராஜன், விடாமுயற்சியுடன் தீவிரமாக விரட்டியபோது, அவரை சக வீரர்கள் உற்சாகப்படுத்தினர். அந்த கடினமான கேட்ச்சை நடராஜன் மிகச்சிறப்பாக பிடித்தார். அந்த கேட்ச்சின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த பிசிசிஐ, நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் என்று பதிவிட்டு, வீடியோவையும் பதிவேற்றியுள்ளது. அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
 

has been grabbing his chances very well on this tour. 😁🙌 pic.twitter.com/sThqgZZq1k

— BCCI (@BCCI)
click me!