தோனி க்ளௌஸ்ல அந்த குறியீடு இருக்கும்.. ஐசிசி-யிடம் அனுமதி கோரிய பிசிசிஐ

By karthikeyan VFirst Published Jun 7, 2019, 2:00 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார். 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வெற்றியுடன் தொடரை தொடங்கியது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, தனது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் “இந்தியன் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ்”-ன் குறியீட்டை பயன்படுத்தினார். 

ஐசிசி விதிப்படி அரசியல், மதம், ராணுவம் சார்ந்த குறியீடுகளை வீரர்கள் எந்த வகையிலும் களத்தில் பயன்படுத்தக்கூடாது. அதனால் தோனியின் விக்கெட் கீப்பிங் க்ளௌசிலிருந்து அந்த குறியீட்டை நீக்க தோனிக்கு அறிவுறுத்துமாறு பிசிசிஐ-க்கு ஐசிசி அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், தோனி பயன்படுத்தியது மதம் சார்ந்த குறியீடோ அல்லது கமர்சியல் குறியீடோ அல்ல. எனவே அவர் பயன்படுத்திவரும் பாரா ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் குறியீட்டை தொடர்ந்து அவரது விக்கெட் கீப்பிங் க்ளௌசில் பயன்படுத்த ஐசிசியிடம் பிசிசிஐ சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். 
 

click me!