பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

Published : Jan 02, 2021, 02:21 PM IST
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியமைத்தவர். சூதாட்டப்புகாரால் சிக்கி சீரழிந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கெத்தாக வெற்றிநடை போடவைத்தவர் கங்குலி.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மிகச்சிறந்த நிர்வாகி மற்றும் தலைமைத்துவ பண்புகளை பெற்ற கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக ஐபிஎல்லை நடத்தி முடித்தார் கங்குலி.

இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று மாலை ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

PREV
click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?