AUS vs Ban 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அலற விட்ட வங்கதேசம்.. வரலாற்று சாதனை வெற்றி!

Published : Aug 16, 2026, 12:38 PM IST
AUS vs Ban 1st Test

சுருக்கம்

AUS vs Ban 1st Test: ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வங்கதேசம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. டார்வினில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

AUS vs Ban 1st Test: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது வங்கதேச அணி. டார்வின் மைதானத்தில் நடந்த போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் சுருட்டி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்ற மூன்றாவது ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குப் பிறகு வங்கதேசம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவை சாய்த்த வங்கதேசம்

நான்காவது இன்னிங்ஸில் வெற்றிக்கு வெறும் 57 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷனிலேயே சுலபமாக இலக்கை எட்டியது. மோமினுல் ஹக் 30 ரன்களுடனும், ஷத்மன் இஸ்லாம் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் கொடுத்த தொடர் நெருக்கடியே இதற்கு காரணம்.

இதையும் படிங்க: Devdutt Padikkal: நம்பர் 3 இடத்துக்கு நான் ரெடி! முதல் டெஸ்ட் சதத்தால் விவாதத்தை கிளப்பிய படிக்கல்

ஆஸ்திரேலியா சரிவுக்கு முக்கிய காரணம்

ஆட்ட நாயகன் விருது வென்ற மெஹிதி ஹசன் மிராஸ், ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆஃப்-ஸ்பின்னரான இவர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 15வது 5-விக்கெட் ஹால் ஆகும். முன்னதாக பேட்டிங்கிலும் 65 ரன்கள் எடுத்து அணிக்கு இவர் உதவியிருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களால் உருவாக்கப்பட்ட ரஃப் பகுதிகளை சிறப்பாகப் பயன்படுத்திய மெஹிதி, ஆஸ்திரேலியாவின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து தலைவலியாக இருந்தார். அலெக்ஸ் கேரி, பியூ வெப்ஸ்டர் மற்றும் நாதன் லயன் ஆகியோரை அவர் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற லயன், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

கேமரூன் கிரீன் போராட்டம்

வங்கதேசத்தின் மற்றொரு ஹீரோ ஹசன் மஹ்மூத். இவர் 111 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற வெளிநாட்டு பந்துவீச்சாளர்களில் இதுவே சிறந்த பந்துவீச்சு ஆகும்.

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை கேமரூன் கிரீன் உயிர்ப்புடன் வைத்திருந்தார். அவர் தனது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தை (100 ரன்கள்) அடித்தார். சுமார் ஐந்து மணி நேரம் போராடிய அவர், வங்கதேசத்துக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

இதையும் படிங்க: TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!

ஆஸ்திரேலியாவில் வங்கதேசத்தின் மைல்கல்

ஆனால், ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் கிரீன் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேேலியாவின் கதை முடிந்தது. அதன்பிறகு மெஹிதி, லயனை வெளியேற்றி இன்னிங்ஸை முடித்து வைத்தார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, வங்கதேச அணி ஒரு சாதாரண அணியாகவே பார்க்கப்பட்டது. ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் தடுமாறி வந்தனர்.

மறுபுறம், ஆஸ்திரேலியா தனது கடைசி 23 டெஸ்டுகளில் 18-ல் வெற்றி பெற்று, கடைசி இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் விளையாடியிருந்தது. இந்த முடிவு, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான அணிக்கு ஒரு மைல்கல் ஆகும். இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என வங்கதேசம் முன்னிலை பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 198 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் 284 (ஸ்டீவ் ஸ்மித் 71, கேமரூன் கிரீன் 104, ஹசன் மஹ்மூத் 6/55, மெஹிதி ஹசன் மிராஸ் 5/66) வங்கதேசம் முதல் இன்னிங்ஸ் 426 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் 57/1

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Devdutt Padikkal: நம்பர் 3 இடத்துக்கு நான் ரெடி! முதல் டெஸ்ட் சதத்தால் விவாதத்தை கிளப்பிய படிக்கல்
TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி