Asia Cup: ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் அபார பவுலிங்..! வங்கதேசத்தை சொற்ப ரன்னுக்கு சுருட்டிய ஆஃப்கானிஸ்தான்

Published : Aug 30, 2022, 09:28 PM IST
Asia Cup: ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் அபார பவுலிங்..! வங்கதேசத்தை சொற்ப ரன்னுக்கு சுருட்டிய ஆஃப்கானிஸ்தான்

சுருக்கம்

ஆசிய கோப்பையில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியை 127 ரன்களுக்கு சுருட்டியது ஆஃப்கானிஸ்தான் அணி.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன.

ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜட்ரான், நஜிபுல்லா ஜட்ரான், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டரை ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கானும் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து சரித்தனர். ரஷீத் - முஜிபுர் ஜோடியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் திணறிய வங்கதேச வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 89 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.

பின்வரிசையில் மொசாடெக் ஹுசைன் அடித்து ஆடி 31 பந்தில் 48 ரன்கள் அடித்தார். மஹ்மதுல்லாவும் 25 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 127 ரன்களையாவது எட்டியது வங்கதேச அணி. ஆனால் இது மிக குறைவான ஸ்கோரே ஆகும். 128 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணி விரட்டிவருகிறது.
 
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான்  ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
 

PREV
click me!

Recommended Stories

பும்ராவையே ஓரம் கட்டிய 'மிஸ்டரி ஸ்பின்னர்'.. T20 தரவரிசையில் வருண் சக்கரவர்த்தி புதிய சரித்திரம்
ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!