முதல் நாள் ஆட்டத்துலயே மொத்த சோலியையும் முடிச்சுவிட்ட இந்திய பவுலர்கள்.. சொற்ப ரன்களில் சுருண்டது வங்கதேசம்

By karthikeyan VFirst Published Nov 14, 2019, 3:24 PM IST
Highlights

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடியது. காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. 

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 6 ரன்களுக்கு, அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க, 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. அதன்பின்னர் களத்திற்கு வந்த முகமது மிதுனும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் பொறுப்புடன் ஆடினார். 

முஷ்ஃபிகுரும் மோமினுல் ஹக்கும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு, ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் அஷ்வின். 

இதையடுத்து மஹ்மதுல்லாவின் விக்கெட்டையும் அஷ்வின் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீமை 43 ரன்களில் போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஷமி. அதன்பின்னர் மெஹிடி ஹசன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், ஹுசைன் ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கே ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது. 
 

click me!