#ENGvsIND இந்த டெஸ்ட் தொடரில் அவருகிட்ட இருந்து இதுமாதிரி இன்னும் பல சம்பவங்களை பார்ப்பீங்க! நெஹ்ரா நம்பிக்கை

By karthikeyan VFirst Published Aug 9, 2021, 10:16 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா இன்னும் சில 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் டாப் ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டின் தலைவர் பும்ரா தான். இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அபாரமாக வீசியிருக்கிறார்.

இந்தியாவிற்காக விக்கெட்டுகளை வீழ்த்தி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பும்ரா, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விக்கெட் வீழ்த்தவில்லை. அவரது பவுலிங்கை நியூசிலாந்து வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு ஆடினர். எனவே அவரது பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. 

இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பும்ரா அபாரமாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து, அவர் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்றும் கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் சிலர் கூறிவரும் நிலையில், பும்ரா கம்பேக் எல்லாம் கொடுக்கவில்லை; அவர் எப்போதுமே சிறப்பாக பந்துவீசித்தான் வந்திருக்கிறார் என்று கேஎல் ராகுல், நெஹ்ரா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

பும்ரா குறித்து பேசிய நெஹ்ரா, ஜஸ்ப்ரித் பும்ரா சரியான ஃபார்மில் இல்லை என்று அவர் மீது விமர்சனங்கள் இருந்தன. ஆனால் நான் எப்போதுமே அப்படி நினைத்ததில்லை. அவரது பவுலிங் ஃபார்ம் குறித்தோ, அவர் நன்றாக வீசவில்லை என்றோ நான் நினைத்ததும் இல்லை; அதுகுறித்து விவாதித்ததும் இல்லை. அது நேரத்தை பொறுத்தது. 2-3 விக்கெட்டுகளை பும்ரா எடுத்துவிட்டார் என்றால், அதே பும்ராவை நாம் பார்க்க முடியும். மற்றுமொரு முறை அவர் யார் என்பதை நிரூபித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உலகமே நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறது. பயோ பபுள் வீரர்களுக்கு எளிதான விஷயம் அல்ல. கிரிக்கெட்டில் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு மட்டுமே ரிதத்தை பிடிக்க சிறிது நேரம் எடுக்கும். இந்த தொடரில் பும்ராவிடமிருந்து மேலும் சில 5 விக்கெட்டுகளை பார்க்கலாம். 4, 6 அல்லது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளது. அவர் விலைமதிப்பில்லா வீரர் என்று ஆஷிஸ் நெஹ்ரா பும்ராவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!