அவங்க 2 பேரும் இருக்குற வெறிக்கு அந்த அணிதான் கோப்பையை வெல்லும்!! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published May 22, 2019, 11:03 AM IST
Highlights

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணி ஆகியவை சிறந்த அணிகளாக திகழ்கின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகின்றன. 

இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. 

பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

பெரும்பாலான ஜாம்பவான்கள் இந்தியா அல்லது இங்கிலாந்துதான் கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டி பிக்கேல் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆண்டி பிக்கேல், தடையிலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் ரன் வேட்கையில் உள்ளனர். சிறப்பாக ஆட வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளனர். எனவே அவர்களின் வேட்கையே ஆஸ்திரேலிய அணியின் பலமாக அமையும். எனவே ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்று பிக்கேல் தெரிவித்துள்ளார்.
 

click me!