Pakistan vs Australia: முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷாஃபிக் - அசார் அலி நிதான பேட்டிங்..!

Published : Mar 22, 2022, 10:03 PM IST
Pakistan vs Australia: முதல் இன்னிங்ஸில் அப்துல்லா ஷாஃபிக் - அசார் அலி நிதான பேட்டிங்..!

சுருக்கம்

3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்கள் அடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது.  

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளும் டிராவான நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் ஆடி 91 ரன்கள் அடித்தார். ஸ்மித் 59 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி 67 ரன்களையும், கேமரூன் க்ரீன் 79 ரன்களையும் குவித்தனர்.

2ம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ம் நாளில் 39 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக்கும், அவருடன் ஜோடி சேர்ந்த அசார் அலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடிவருகின்றனர்.

2ம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது. அப்துல்லா ஷாஃபிக் 45 ரன்களுடனும்,  அசார் அலி 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!