இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா: ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. ஆர்ச்சர் தான் கேம் சேஞ்சர்

By karthikeyan VFirst Published May 31, 2019, 11:26 AM IST
Highlights

312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ஆம்லா ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் தொடங்கினர். 

உலக கோப்பை தொடரின் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோ ரூட், இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய நால்வரும் அரைசதம் அடிக்க, அந்த அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்களை குவித்தது. 

312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் வாண்டெர் டசன் ஆகிய இருவரை தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. டி காக் 68 ரன்களையும் டசன் 50 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. அந்த அணி 40வது ஓவரில் வெறும் 207 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸின் போது திருப்புமுனையை ஏற்படுத்தியது இங்கிலாந்து அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர் தான். ஆர்ச்சர் மீது பெரும் நம்பிக்கை வைத்து டேவிட் வில்லி நீக்கப்பட்டு ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ஆம்லா ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் தொடங்கினர். விக்கெட் வீழ்ச்சியடையாமல் பார்த்துக்கொண்டால் எட்டக்கூடிய இலக்குதான் என்பதை அறிந்து நிதானமாக தொடங்கினர். ஆனால் ஆர்ச்சரின் பவுன்சரில் ஆம்லா ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். அதன்பின்னர் மார்க்ரம் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இருவரையும் ஆர்ச்சர் வீழ்த்தி செம பிரேக் கொடுத்தார். 

அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாவிட்டாலும் ஆம்லா நன்றாகத்தான் தொடங்கினார். ஆனால் ஆர்ச்சர் வீசிய பவுன்ஸரை அடிக்க டைமிங் கிடைக்காமல் ஹெல்மெட்டில் அடிவாங்கினார் ஆம்லா. 4வது ஓவரின் 5வது பந்தை ஆம்லாவிற்கு நேராக 145 கிமீ வேகத்தில் பவுன்ஸராக வீசினார் ஆர்ச்சர். அந்த பந்து ஆம்லாவின் ஹெல்மெட்டில் அடிக்க, அதனால் நல்லவிதமாக உணராத ஆம்லா, ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அதன்பின்னர் மார்க்ரம் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இருவரும் ஆர்ச்சரின் 8 மற்றும் 10வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஆட்டம் இங்கிலாந்து வசம் வந்தது. ஆம்லா ரிட்டயர்ட் ஹர்ட் ஆகவில்லை என்றால் தொடக்க ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் வாய்ப்பு இருந்தது. 

ஆனால் ஆம்லாவின் ரிட்டயர்ட் ஹர்ட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பின்னர் ஆர்ச்சர் வீழ்த்திய 2 விக்கெட்டுகளும் முக்கியமானது. 
 

click me!