உலக டி20 லெவன்.. ஐசிசி-யின் சவாலை ஏற்ற முன்னாள் இந்திய வீரரின் தரமான தேர்வு.. முக்கியமான 2 தலைகளுமே இல்ல

By karthikeyan VFirst Published May 1, 2020, 4:06 PM IST
Highlights

ஐசிசியின் சவாலை ஏற்று ஒரு அணியிலிருந்து ஒரு வீரர் என்ற வீதம் உலக டி20 லெவனை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்.
 

கொரோனாவால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

எனவே சக வீரர்களுடன் அல்லது ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளங்களில் பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்வது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

ஐசிசியும் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இந்திய அணியின் பழைய சிறந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பிவருகிறது. இந்நிலையில், ஐசிசி சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தது. அதாவது, உலக டி20 லெவன் அணியை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஒரு கண்டிஷன்... அது என்னவென்றால் அந்த லெவனில் ஒரு அணியிலிருந்து ஒரு வீரரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான். எனவே ஒரு அணியிலிருந்து ஒரு வீரர் என்ற வீதம் உலக லெவனை தேர்வு செய்ய சொல்லியிருந்தது ஐசிசி. 

ஐசிசியின் இந்த டாஸ்க் சவாலானதாக இருந்ததையடுத்து அதை தேர்வு செய்ய விரும்பிய இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, ஃபேஸ்புக்கில் தனது உலக டி20 லெவனை தேர்வு செய்துள்ளார்.

வார்னர் மற்றும் இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் நியூசிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் காலின் முன்ரோவை மூன்றாம் வரிசை வீரராகவும் தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, விராட் கோலி அல்லது ரோஹித் சர்மாவை தேர்வு செய்யாததற்கான காரணத்தையும் கூறினார். 

நான் ஏன் விராட் கோலியையோ ரோஹித்தையோ எடுக்கவில்லை என்று நினைக்கலாம். ஆனால் ஒரு அணியிலிருந்து ஒரு வீரரை மட்டுமே எடுக்க முடியும் என்பதால் பும்ராவை ஃபாஸ்ட் பவுலராக எடுக்க வேண்டியிருப்பதால் அவர்களை எடுக்க முடியவில்லை என்று கூறினார்.

நான்காம் வரிசை வீரராக பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேனும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவாகிவருபவருமான பாபர் அசாமையும் ஐந்தாம் வரிசைக்கு டிவில்லியர்ஸையும் தேர்வு செய்தார் ஆகாஷ் சோப்ரா.

ஷகிப் அல் ஹசன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரையும் ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார். இருவருமே பேட்டிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள் என்பதால் அவர்களை தேர்வு செய்துள்ளார். இருவருமே பேட்டிங் சிறப்பாக ஆடுவதுடன், ஷகிப் அல் ஹசன் ஸ்பின் பவுலிங் வீசுவார், ரசல் மீடியம் ஃபாஸ்ட் பவுலிங் போடுவார். 

ஸ்பின் பவுலர்களாக ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் மற்றும் நேபாள வீரர் சந்தீப் லமிஷேன் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த உலக டி20 லெவன்:

டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர், காலின் முன்ரோ, பாபர் அசாம், டிவில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சந்தீப் லமிசேன், பும்ரா, மலிங்கா.
 

click me!