5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றாலும் கோலியை விட ரோஹித் ஒன்றும் பெரிய கேப்டன் இல்லை..!

By karthikeyan VFirst Published Nov 13, 2020, 10:56 PM IST
Highlights

5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார் என்பதற்காகவே ரோஹித்தை இந்திய டி20 அணியின் கேப்டனாக்க முடியாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல்லில் ஐந்து முறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ரோஹித் சர்மா தான். அதுவும் அவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற 8 ஆண்டுகளில் ஐந்து முறை தனது அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வழிநடத்தும் ஆர்சிபி அணி ஒரு முறை கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவரும் நிலையில், மும்பை அணி ஐந்து முறை அசால்ட்டாக கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து ஆர்சிபி அணியையும் அதன் கேப்டன் விராட் கோலியையும் எப்போதுமே விமர்சித்துவரும், கம்பீர், இந்திய டி20 அணியின் கேப்டனாகவாவது ரோஹித்தை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கம்பீரின் கருத்துடன் மற்றொரு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா முரண்பட்டுள்ளார்.  கம்பீரின் கருத்து குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ரோஹித் சர்மாவை இந்திய டி20 அணிக்குக்கூட கேப்டனாக்கவில்லை என்றால், அது தேசத்தின் துரதிர்ஷ்டம் என கம்பீர் கருதுகிறார். ஆனால் ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார் என்பதற்காகவே, ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக்க முடியாது. ரோஹித்திடம், இப்போது கோலி வழிநடத்தும் ஆர்சிபி அணியை ஒப்படைத்தால், ரோஹித்தால், 2, 3, 4 ஐபிஎல் டைட்டில்களை வெல்ல முடியுமா? 

ரோஹித் மிகச்சிறந்த கேப்டன் தான். அவரது கேப்டன்சி எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மும்பை இந்தியன்ஸின் வெற்றியை இந்திய அணியுடன் ஒப்பிட முடியாது. கோலியின் அணி சரியாக ஆடவில்லை என்பதற்கு கோலி பொறுப்பல்ல; அது அவரது தவறும் அல்ல என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!